காங். எம்பி. மனைவியின் சர்ச்சை கருத்து விதி பலாத்காரத்திற்கு சமமானது தடுக்க முடியாவிட்டால் அனுபவியுங்கள்

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்பி. ஹிபி ஈடன். இவரது மனைவி அன்னா லிண்டா ஈடன் அவருடைய முகநூலில், விதி என்பது பாலியல் பலாத்காரத்துக்கு சமமானது. நீங்கள் அதனை தடுக்க முடியாவிட்டால், அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்' என்று கூறியதுடன், அவருடைய வீடு வெள்ளத்தில் மூழ்கிய இரண்டு வீடியோக்களை பதிவிட்டார்.  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த பதிவை அவர் நீக்கினார். அத்துடன் அவருடைய கமெண்ட்டுக்கு வருத்தம் தெரிவித்தும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், என்னுடைய வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருப்பதை வெளிக்காட்ட முயற்சித்து கருத்து பதிவிடப்பட்டது. மக்கள் பிரதிநிதியின் மனைவி என்ற முறையில் மக்களின் கஷ்டங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நான் வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன்' என்று கூறியுள்ளார்.


Popular posts
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ‘வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை சந்திக்க வேண்டாம்’ சுகாதார அதிகாரி பேட்டி
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
Image