நல்லாட்சி. நவம்பர் 2019
மக்கள் தொகை அதிகம் உள்ள தொகுதிகளில் ஆளும்கட்சி அமைச்சர் மற்றும் எம்எல்ஏவாக இருப்பவர்கள் தமிழக அரசு மூலம் கூடுதலாக நிதியை ஒதுக்கி சமாளித்து விடுவார்கள். அதுவே எதிர்கட்சி திமுக எம்எல்ஏவாக இருந்தால் தமக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியின் மூலமாக பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க பல்வேறு சிரங்களை சந்திக்க வேண்டி வரும்.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் தென் சென்னை தெற்கு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட மிகப்பெரிய தொகுதியில் சென்னை மாநகராட்சியை சேர்ந்த 20 வட்டங்கள் 14 மற்றும் 15 என இரு மண்டலங்கள் பரங்கிமலை ஒன்றியத்ததை சேர்ந்த ஏழு ஊராட்சிகள் உள்ளது.
கடந்த 2006 திமுக ஆட்சியில் இருந்த போது காஞ்சி மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாக இருந்த தாம்பரம் தொகுதியை பிரித்து, சோழிங்கநல்லூர் தொகுதியாக தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது.
2011 சடட்டசபை தேர்தலில் இத்தொகுதியை அதிமுக கைப்பற்றினாலும் 2016 சட்டசபை பொதுத் தேர்தலில் சோழிங்கநல்லூர் திமுகவின் மத்திய பகுதி செயலாளரான எஸ்.அரவிந்த்ரமேஷ் எம்எல்ஏவாக வெற்றி பெற்று திமுகவின் கோட்டையாக்கியுள்ளார்.
2016 தேர்தலில் கட்சியாக திமுக வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருந்தால் எம்எல்ஏவாக வெற்றிப் பெற்ற அரவிந்த் ரமேஷ் தமது தொகுதி நிதியுடன் கூடுதலாக அரசிடம் நிதியை வாங்கி தொகுதியில் பெயர் கூறும் விதமாக மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருப்பார். அவருக்கும் தற்பொழுது போல் எந்தவித சிரமுமம் இருந்து இருக்காது என்று கூறும் அத்தொகுதி வாசிகள் அப்படி இருந்து அரவிந்த்ரமேஷ் நமது நிர்வாக திறமை மூலமாக இருபது வட்டம் ஏழு ஊராட்சிகளில் பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை வசதிகளில் ஒன்றான புது ரேஷன் கடைகள் கட்டுவது, குடிநீர் பறற்றாக்குறையை போக்க சின்டெக்ஸ் டேங்குகள் வைப்பது என செயல்பட்டு பெரிய தொகுதியான சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள பொதுமக்களிடம் நன் மதிப்பை பெற்று வருகிறார், நீங்கள் நேரில் வந்து கூட எம்எல்ஏ அரவிந்த்ரமேஷின் செயல்பாடுகளை பார்க்கலாம் என நம்மை அழைத்தார்கள்.
சென்னை மாநகராட்சியின் பெருங்குடி கல்குட்டை 184வது வட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ அரவிந்த்ரமேஷ் அப்பகுதியில் மழைநீர் வெளியே போகாமல் தேங்கி நிற்பதை கண்டறிந்தவர் தமது சொந்த செலவில் ஜே.சி.பி இயந்திரத்தை வரவழைத்து தேங்கிக்கிடந்த அம்மழை நீரை வெளியேற்றி அப்பகுதி பொது மக்களிடம் நம்பிக்கையை பெற்றார்.
அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் துரைப்பாக்கம் பகுதியான கலைமான் நகர், ஈஸ்வரன் கோயில் தெரு, அழகப்பா நகர், பாலாஜி நகர், பா£ரதியார் நகர், தலைமை செயலக குடியிருப்பு போன்ற பகுதிகளில் ஆய்வு செய்த எம்எல்ஏ அரவிந்தரமேஷ் அப்பகுதியில் சாலைகள், குடிநீர் குழாய்கள், தெருவிளக்கு மழைநீர் வாடிகால்வாய் போன்றவைகளை சீரமைக்க வேண்டுமென அரசு அதிகாரிடம் தெரிவித்தவர், அதைத்தொடர்ந்து அதே வட்டத்திலுள்ள குமரன் குடியிருப்பு பகுதியில் 2016&17 ம் ஆண்டிற்கான தமது தொகுதி நிதியான 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
ஒவ்வொரு வட்டங்களிலும் ஆய்வு செய்து மக்களின் அடிப்படை வசதிகளை தீர்த்து வரும் எம்எல்ஏ அரவிந்த்ரமேஷ் உள்ளகரம், புழுதிவாக்கம் 14வது மண்டலத்தில் 11வது வட்ட பொதுமக்ளின் குறைகேட்பு முகாமை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் தலைமையில் நடத்தி முடித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட குறைகேட்பு மனுக்களை 14வது மண்டல அதிகாரிகளிடம் ஒப்படைத்து அக்குறைகளை உடனே தீர்த்து வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அசோசியேஷன் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் சிலர் எம்எல்ஏ அரவிந்த்ரமேஷ் ஏற்கனவே தீர்த்து வைத்த பொதுமக்களின் அடிப்படை வசதிகளை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்தனர்.