தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான தேர்தல் வரும் 27,30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து நடைபெறவுள்ள இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு ஆகிய பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளது.