அக்டோபர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 84.3 கோடி டெபிட் கார்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ஆனால் 2018ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்த டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 99.8 கோடியாகும்.
இது 15 சதவீத வீழ்ச்சியாகும். மேக்னெஸ்டிக் ஸ்ட்ரிப் கார்டுகளாக மாற்றும் முயற்சியில் 15.5 கோடி டெபிட் கார்டுகள் இல்லாமல் போயுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். செயலற்ற வங்கிகக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் பயன்படுத்தப்படாத டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளது.