இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு இந்தியாவில் ரொக்கப் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. தேநீர் முதல் மொபைல் போன் வரை அனைத்துப் பொருட்களையும் மக்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கத் தொடங்கிவிட்டனர்.
அதற்கான தொகையையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்துகின்றனர். இதனால் நாளுக்கு நாள் டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. மேக்னடிக் ஸ்ட்ரிப் கார்டுகளை வங்கிகள் கட்டாயமாக்கியதாலும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.