3,350 டன் அளவுள்ள தங்கம் உள்ளது உண்மையா - இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் சொல்வது என்ன

" alt="" aria-hidden="true" />

 

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ராவில் சுமார் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்,  இது இந்தியாவில் தற்போது கையிருப்பு உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகின.



இந்நிலையில், உ.பி.யின் சோன்பத்ரா மாவட்டத்தில் 3,350 டன் தங்கம் நிலத்தடியில் உள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:


 

இந்த செய்தி வெளியானதற்கும் புவியியல் ஆய்வு மையத்துக் கும் எந்த தொடர்பும் இல்லை, சோன்பத்ரா மாவட்டத்தில் இதுபோல் பெரிய அளவு தங்கம் இருப்பதாக புவியியல் ஆய்வு மதிப்பிடவும் இல்லை.

 

தங்கம் இருப்பு குறித்து நாங்கள் பல ஆய்வுகள் நடத்தியுள்ளோம். ஆனாலும் அதன் முடிவுகள் சோன்பத்ராவில் இந்த அளவு தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை. 1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வு இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

சோன்பத்ரா மாவட்டத்தில் சாத்தியமான தாது 52,806.25 டன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒரு டன் தாதுப் பொருளில் சராசரியாக 3.03 கிராம் தங்கம் கிடைக்கும். அதன்படி அங்கு இருக்கும் தாதுப்பொருளில் சுமார் 160 கிலோ தங்கம்தான் கிடைக்கும், ஊடகங்களில் வெளியானதுபோல 3,350 டன் அல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது


Popular posts
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ‘வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை சந்திக்க வேண்டாம்’ சுகாதார அதிகாரி பேட்டி
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
Image